“நீரின்றி அமையாது உலகு”

Posted by Admin on 15-10-2018 10:00 AM

“நீரின்றி அமையாது உலகு”


நமது உடல் அதிகபட்சம் நீரால் ஆக்கப்பட்டது. மீதுமுள்ள அனைத்து மூலங்களும் நீரின் கலவைகளேயாகும் என்பது இன்றைய நம் மருத்துவ விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.

நீரின் தன்மையைப்பற்றி ஆராய்ந்தால் நம் மனதில் தெளிவிற்கு ஏற்றாற்போல் நீரில் நிலைப்பாட்டில் தெளிவும், செறிவும் ஆக இருப்பது அதன் இயல்பு என்பதையும், அதன் தன்மைக்குத் தக்கவாறு நம் மனதில், செயலில் உணர்வில் வெளிப்படுத்துபவை என்றும் நிரூபணம் செய்துள்ளார்கள் இன்றைய விஞ்ஞானிகள்.

நீருக்கும் நிலவுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்றும், நிலவுக்கும் மனதுக்கும் நேரடி தொடர்புண்டு என்றும் நம் முன்னோர்கள் உணர்ந்ததால்தான் அம்மாவாசை, பௌர்ணமி, நாட்களில் மனிதனின் மனதில் இருவேறு மாற்றங்கள் உண்டாகும் என்பதை உணர்ந்து, அச்சமயங்களில் மனதில், உடலில் கடுமையான வேலைகளில் ஈடுபடாவண்ணம் இருக்க ஆன்மீகச் சிந்தனைகளைக் சிந்திக்கச் செய்தனர். இலங்கை போன்ற நாடுகளில் அச்சமயங்களில் அரசு விடுமுறையாகக் கூட கடைப்பிடிக்கின்றனர்.

பௌர்ணமி சமயம் நீரின் மிகப் பிரம்மாண்டமான இருப்பான கடல் கொந்தளிப்பதையும், அதன் அளவில் மேல் எழுந்து கடல் பொங்குவதாக தெரிவதையும் நாம் பார்த்திருப்போம். அதேசமயம் நம் பூமிக்கும் நிலவுக்கும் அமையும் தூரத்தில் அதிகபட்சமாக தள்ளி நிற்கும் சமயம் அதாவது அம்மாவாசை நாளில் கடல் உள்வாங்குவதையும் காணலாம். இதிலிருந்து நாம் அறிய வேண்டியவை சந்திரனின் நெருக்கத்திற்குத் தக்கவாறு அதன் ஈர்ப்பு சக்தியில் திணிவு கூட அதனால் ஈர்க்கப்பட்ட நீர் தன் தன்மையில் விரிவடைவது இயல்பு. அந்த நிகழ்வு ஒவ்வொரு உயிருடலிலும் நடக்கும். ஏனெனில் - எல்லா ஜீவன்களும் பெரும்பான்மையாக நீரின் மூலக்கூறுகளால், நீரால் ஆனவையே. அதேபோல் நமக்குள்ளும் இந்த நிலாவின் ஈர்ப்பு சக்திக்குத் தக்கவாறு நம் உடலில் உள்ள நீர்மம் ஆன இரத்தத்தில் அதன் தன்மையில் பெருக்கமும் சுருக்கமும் நடந்தே தீரும். அதாவது இரத்தத்தி;ன் அடர்த்தி கூடவும் குறையவும் செய்யும். அதற்கேற்றாற்போல் இரத்த ஓட்டம் கூடவும் குறையவும்தான் செய்யும். மேலும் இரத்தத்தின் அடர்த்தி கூடும்போது அதன் எடுத்துச் செல்லும் தன்மையில் மாற்றம் உண்டாகியே தீரும். அடர்வு-திணிவு குறைவாக உள்ளபோது அதனோடு அதிகபட்ச பொருள்களை ஈர்ப்பதும், எடுத்துச் செல்வதும் (நகர்த்துவதும்) இயல்பு. அந்த சமயத்தில் எளிதில் நம் உடலில் வளர்ச்சியும், சிதைவும் வேகமாக, அதாவது ஆரோக்கியமாக மாற்றும் நடவடிக்கைகள் அமைய ஏதுவாக இருக்கும். அதற்கு மாறாக அடர்த்தியான, திணிவாகவுள்ள இரத்தத்தில் சத்துப் பொருட்களையோ (செரித்துக் கிடைத்த சத்துக்களையோ), உடலின் உயிர் அணுக்களில் நிரம்பிய கழிவுப் பொருட்களையோ கடத்த, எடுத்துச் செல்ல எளிதில் இயலாத நிலை ஏற்படும். ஏனெனில் ஏற்கனவே அது அடர்ந்து, திணிவாக இருக்கும் பட்சத்தில் மற்றவற்றை (சத்தையும், அழுக்கையும்) அனுமதிக்காது என்பதை அறியவேண்டும். எனவே அமாவாசை நாட்களில் எளிதில் செரிக்க இயலாததை, கடினமான உணவுகளை உண்ணக்கூடாது. அதைத்தான் நம் முன்னோர்கள் அமாவாசை விரதம் என்று கடைப்பிடித்தார்கள். அந்த நாட்களில் மனிதர்களின் உடலில் ஏற்படும் நீரின் மாற்ற நிகழ்வுகளால் உடல் சூடு அதிகாpக்கும். அதன் விளைவாக மனநல சீர்கேடு ஏற்பட்டு காம இச்சைக்கு அதாவது சிற்றின்ப சுவைக்கு ஈர்க்க அல்லது உந்தப்படுகிறது மனம். எனவேதான் அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் உடல் நலத்திற்காகவும், மனக்கட்டுப்பாட்டிற்காகவும் நம் முன்னோர்கள் ஆன்மீக நாட்டத்தை உருவாக்கி, அதற்கொரு கோட்பாடு வகுத்து, மக்களின் மனதை திசை திருப்பினார்கள் என்பதே காரணம்.

நமது நலமும், வளமும், திடமும் நாம் உண்ணும் உணவு சக்தியாக மாற்றப்பட்டு உடலில் உயிர் அணுக்களில் அச்சக்தி திணிவு பெற வேண்டும். அச்செயல் நடக்க சத்துப் பொருட்களையும், கழிவுப் பொருட்களையும் கடத்தும் நீர்மப் பொருளின் நிலையைப் பொறுத்ததே அன்றி, நாம் உண்ணும் சத்தை மட்டும் பொருத்ததல்ல என்பதை உணரவேண்டும். காரணம் இரத்தத்தின் ஓட்டம் (பாய்மம்) அதாவது அதனுடைய ஓடும் தன்மை அதன் மேல்தள இறுக்கத்திற்குத் தகுந்தாற்போல் மாறும் என்பது பெதிகக் கோட்பாடு. அதாவது, பாதரசத்தின் / எண்ணெயின் வேகத்திற்கும் நீரின் வேகத்திற்கும் நிச்சயமான மிகப்பெரிய வேற்றுமை உண்டு என்பதை நன்கு அறிவோம். அதேபோல பாதரசம்/ எண்ணெய் தன்னோடு எதையும் சரியாக கலந்துகொள்ள அனுமதிக்காது, ஆனால் நீர் அப்படி அல்ல என்பது போல இரத்தத்தின் தன்மை எப்போதெல்லாம் மேல்தள இறுக்கம் இறுகியும் நீர்த்தும் போக வாய்ப்புள்ளது என்பதைச் சற்று சிந்திப்போம். மனம் தளர்வாக, மகிழ்வாக, இயல்பாக, ஏற்கும் தன்மையோடு (பிடிவாதமின்றி, கோபமின்றி, கவலையின்றி, பயமின்றி, வேதனையின்றி, பொருமையின்றி) இருக்கும்போது நிச்சயமாக நீரின் இயல்பு மேல் தளத்திணிவு குறைந்து (அடர்வு) மென்மையாக மாறும். அதனால் வினைபுரிதல் - அதாவது அதன் ஈர்த்துச் செல்லும் செயலில் தெளிவும், மேன்மையும், நேர்த்தியும் இருக்கும். அதன் விளைவாக வயிற்றில் செரித்த சத்துக்களை உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் மென்மையாக இயல்பாக கொண்டு சோ;த்து, அங்கு கிடைக்கும் அழுக்குப் பொருட்களை திரும்பப் பெற்றுக்கொண்டு வந்து கழிவு உறுப்புகளான நுரையீரல், தோல், சிறுநீரகம் என்று எல்லா கழிவு மண்டலங்களுக்கும் சேர்த்து அக்கழிவுகளை எளிதில் பிரிக்க உதவிகரமாக அமையும். அதன் விளைவாக உடல் நலம் காப்பதோடு மனவளம் பெருகும், வாழ்வும் வளமாகும்.

நமது பாய்மப் பொருளான இரத்தம் நாம் உணர்ச்சி வசப்படும்போது அதன் மேல் தளம் இறுகி எடுத்துச்செல்லும் இயல்பை இழந்துவிடுகிறது. அதாவது நாம் கோபம், பயம், வேதனை, துக்கம், பெருமை மற்றும் கவலைப் படும் சமயத்தில் இரத்தத்தின் மேல் நிலை இறுக்கம் கூடுவதால் (Surface Tension) எதையும் தன்னுடன் எளிதில் சேர அனுமதிக்காததால், உடலில் கழிவுப் பொருள் பிரித்தலும் சத்துப் பொருள் சேர்தலும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும். இதுவே பழக்கமாகிவிட்டால், அதாவது, கவலைப்படுவது, கோபப்படுவது என்று இயல்பாhக்கிக் கொண்டால் தற்செயலாக நின்ற கழிவுகள் தொடர் நிகழ்வாக மாறி வயாதிக்கு வித்திட்டு வளர ஆரம்பிக்கும். பின்னாளில் அதுவே தீராத, தீர்க்க முடியாத வியாதி என்று பெயர் வைக்கிறோம்.

குறப்பு: Emoto என்ற ஜப்பான் நாட்டு விஞ்ஞானி நீரின் பலவிதமான வடிவமைப்பு மாற்றங்களை நம் எண்ணத்திற்கும், சொல்லுக்கும் மாற்றும் வல்லமையுள்ளது என்பதை நிரூபணம் செய்துள்ளார்.

நம் முன்னோர்கள் நீரை மட்டும் உணர்வேற்றிக் கொடுத்து தீர்க்கமுடியாத வியாதிகளையும் தீர்த்துள்ளார்கள். இது நம் முன்னோர்களின் இயல்பான செயல். சாதாரணமாக நீரின் (Surface Tension) மேல்நிலை இறுக்கம் 73 dynes/cm2 என்று இருப்பதை, அவர்களின் எண்ணத்தின் வலிமையால் 48 dynes/cm2 என்று குறைவதால் தான் நோய்கள் குணமாகின்றன என்பதையும் மேன்மையான எண்ணத்தால், தளர்வால், இயல்பான மன இறுக்கத்தைத் தளர்த்துவதால் நீரின் மேல்நிலை இறுக்கம் குறைகிறது என்பதையும் இன்றைய விஞ்ஞானிகள் நிரூபணம் செய்துள்ளனர்.

தீராத வியாதிகளையும் நம் முன்னோர்கள் எளிதாக குணப்படுத்த உதவியது தம் திண்ணிய எண்ணத்திணிவில் நோய் நீக்கிப் பொருளாக மாற்றியது நீரைத்தான் என்பதை அறிவோம். ஆம். நம் முன்னோர்கள் உடல் நலம் குன்றியவர்களுக்கு சிறிய பாத்திரத்தில் நீரை எடுத்துக்கொண்டு அதை மானசீகமாக இரக்கப்பட்டு உணர்வேற்றி வழங்கப்பட்டதன் விளைவாக எண்ணற்ற நபர்கள் நலமடைந்ததை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

மெஸ்மரும் இதையே வெளியிலிருந்து எதையும் உட்செலுத்தாமல் மென்மையாக தொடுவதால் நீரின் - நீர்மத்தின் - இரத்தத்தின் இயல்பு மாறுவதை உணர்ந்ததால் தான் என்னவோ முதலில் தான் தொட்டும், அதற்குப்பின்னர் நோயாளிகள் தன்னைத் தொட்டும், அதற்குப்பின் நோயாளிகள் தான் மனதால் திணிவேற்றப்பட்ட மரத்தைத் தொட்டும் குணமானதை வரலாறு கூறுகிறது.

அதை அறிவியல்பூர்வமாகவும், நம் அனுபவ அறிவாலும், விளக்கிப் புரியவைக்கும் விஞ்ஞானப்பூர்வமாகவும் அறிய, நீரின் மேல்தள இறுக்கம் 73 dynes/cm2 சாதாரண நிலையில், அதாவது நாம் உணர்ச்சியின் வசப்பட்டு உறையும்போது (குசநநணந) தள இறுக்கம் கூடியும், நாம் தளர்வாக, இயல்பாக, இனிமையாக, ஆர்வமாக இருக்கும் சமயம் இரத்தத்தில் தள இறுக்கம் குறைந்து 48 - 58 dynes/cm2 ஆக மாறுவதை மருத்துவ விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளார்கள். மேலும், சான்றாக, நம் பயன்பாட்டறிவுக்கு, பட்டறிவுக்கு, அனுபவ அறிவுக்கு வருவோம். கடுமையான நோயால் பிடிக்கப்பட்டோரும் மென்மையான அக்குபங்சர் தொடுதலுக்குப்பின் உடனடி நிவாரணம் பெறுவது மிக இயல்பாக நடந்துகொண்டிருப்பதே இதற்கு மேலான ஆதாரம்.






Related Articles

Treatment Center Locations