அக்குபஞ்சரில் சுகம்
மகி ராமலிங்கம்
உலகில் எந்த மருத்துவத்தில் மருந்தின் உதவியாலோ நோய் போய்விட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆம், நோய்க்குறிகளை மட்டும் மறைக்கும் தன்மையை செய்து வெளியேற வேண்டிய உடலின் கழிவுகளை உள்ளேயே அடக்கி, திணிப்பதுவே மருந்துகளின் பொதுவானவை வேலை. சிறப்பு வேலை என்னவென்றால் எளிதில் வெளியேறாமல் எவ்வளவுக்கு எவ்வளவு திணிக்க முடியுமோ அதிகபட்ச திணிப்பை சிறப்பாக செய்வது. அதனால்தான் என்னவோ நோய் பன்மடங்கு நீண்ட போகின்றது என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆனால் அக்குபஞ்சரில் நோயின் முதல் நாடி அதாவது நோயின் காரணம் மணமாக இருக்கும் பட்சம் மன மாற்றம் உண்டாகிறது. வேதியல் காரணமாக இருக்கும் பட்சம் தேவைக்கேற்ப வேதிவினை மாற்றம் கொண்டு பெற வேண்டியதை பெற்று வெளியேற்ற வேண்டியது வெளியேற்றி சமன்செய்யப்படுகிறது. அதே சமயம் உன் அவயங்களின் இயக்கம் கழிவுகளின் தேக்கத்தால் தடைபட்டு இருப்பின் கழிவுகளை வெளியேற்றி இயக்கத்தை ஒழுங்கு படுத்திக் கொள்கிறது.
உடலில் வளர்சிதை மாற்றத்தில் எது முதலில் எது கடைசியில் நடக்க வேண்டும் என்று உயிர்சக்தி முடிவெடுக்கும் திறனும், செயல் ஆற்றும் திறனும் பெறுவது இயல்பு. ஆகவே அக்குபங்சர் சிகிச்சை மேற்கொண்ட பின் உயிருக்கும் உடலுக்கும் ஏது அதிமுக்கியம் எதை எப்போது எப்படிச் செய்ய வேண்டும் என்று உயிர்சக்தி அதன் போக்கில் இயல்பில் செயல்பட ஆரம்பிக்கிறது. ஆக மன உடல் உணர்வுகளை ஒழுங்குபடுத்துவது ஒரு தெளிவான உடல் இயக்கத்தையும் கொடுத்து ஆரோக்கியத்தை எளிதில் அடைய வழிவகுப்பது அக்குபங்ச்சர்.