மனமும் பலமும்

Posted by Admin on 23-10-2024 2:26 PM

'மனம்போல் வாழ்வு”. ஆம். மனம் நம் வாழ்வை வடிவமைக்கும் எல்லையில்லா ஆற்றல் களம். மனதைப் போற்ற போற்ற. வாழ்த்த வாழ்த்த, அதன் விளைவே அதனை வழி நடத்தும் நம் உடலும். வாழ்க்கையும். செழிப்பும். வளமும் பெறுவது இயல்பு, இயற்கை. 


எந்த வேலையில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டாலும், மனம் வைத்து செய்தால் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்பது நம் பெரியோர்களின் வாக்கு. மனதார செய் என்று அவர்கள் கூற நாம் கேட்டிருப்போம். அதாவது, முழு மனத்துடன் எந்த வேலையில் ஈடுபட்டாலும் அது நல்ல பலனில் முடிவதும், அதனால் மன நிறைவை அடைவதும் நம் அனைவரின் அனுபவமாகக் கூட இருப்பதை நாம் அறிவோம். 


சில நேரங்களில் நாம் அடிக்கடி, உறுதியாக நினைக்கப்பட்ட செயல். ஒரு வேளை நம்மால் செய்ய வாய்ப்பில்லாமல் போக நேரிட்டாலும், நம்முடன் தொடர்புடையவர். நமக்கு மிகவும் வேண்டப்பட்டவர் அதைச் செய்து முடிப்பதைப் பார்த்து சந்தோசமடைபவர்கள் ஏராளம். அதாவது நான் செய்ய வேண்டும் என்றிருந்த இந்த செயலை நீங்கள் செய்ததும் என் மனம் உள்ளூர மகிழ்கிறது. ஏனெனில் பலமுறை நான் செய்யலாம் என்று நினைத்தும் செய்யும் தருணம் வாய்க்கப்படவில்லை என்போம். அதாவது ஒரு சேவை, தொண்டு போன்ற சில செயல்களால் சமுதாயம் மகிழ்ச்சியடையும் என்பதாக இருக்கும் பட்சத்தில் அது எவர் செய்திருந்தாலும் நம் அகமும் மகிழும்.

 


மகிழ்ச்சி என்றாலே உடலில் ஒரு நெகிழ்ச்சி, அதாவது பலம், பக்குவப்பட்ட நிலையை அல்லது நிறைவை அடைவதாகும். அதாவது. சில காரியங்கள் - செயல் செய்தபின் அதைப்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மிக நிறைவாகவுள்ளது.  இதை நினைக்கும்போதெல்லாம் மனம் மகிழ்ச்சியடைகிறது என்று சொல்லக் கேட்டிருப்போம். அதாவது நன்மையை நாம் அடைந்தாலும், நம்மைச் சார்ந்தவர்கள் அடைந்தாலும் அது ஒரு சுகமான நிகழ்வைத் தாங்கி நிற்பது இயற்கை. இதுவே மனதின் பலம். அதன் விளைவு உடலிலும் மாற்றங்கள் அடைவதை நாம் அறியாதவர்களில்லை. 


விழாக்காலங்களில் மனம் மகிழ்வடைவதால் உடலில் அசதிகூடத் தெரிவதில்லை. பலமின்மை இருந்தாலும் அந்த நேரத்தில் அது தெரிவதில்லை. காரணம் மனதின் மகிழ்வால் எல்லா அணுக்களும் தேவையான தொடர்பு கடத்தியாக தடையின்றி செயல்படுவதேயாகும். அதாவது அறிவால் அறிந்த சில செயல்கள் செயலுக்கு வர கால அவகாசம் தேவைப்படலாம். ஆனால் மனதால் உணரப் பட்டவைகள் நெஞ்சார ஏற்றுக்கொண்டேன் என்று பலர் பசமயங்களில் கூற நாம் கேள்விப்பட்டிருப்போம். அவைகள் அப்போதைக்கப்போதே செயல்படத் துவங்கிவிட்டன என்பதை நாம் அறிய வேண்டும். இதைத்தான் விஞ்ஞானிகள் மூளையில் இருந்து பெறப்பட்ட தெளிவும், விளக்கமும் செயல்படுவதைவிட இருதயத்தின் மூலம் புறப்பட்ட, பெறப்பட்ட நிகழ்வுகள் 1000 மடங்கு வேகமானது என்பதை நிரூபித்துள்ளார்கள். 


அதே மனதில் நம் தேவையற்ற சமிக்கைளைப் பெறப்பட்டோம் என்றால் மனதும், உடலும் உடனே பிரதிபலித்திடும். அதாவது நாம் எதிர்பார்த்ததற்கு எதிராக சில காரியங்கள் செய்யப்பட்டிருப்பின் அதன் விளைவை கண்ணுற்றதும் மனம் வாடிவிடுகிறது. உடலும் துவண்டு போகிறது. உற்சாகத்தை இழந்து விடுகிறது 


"மனித ஜாதியில் தோன்றும் துயரம் யாவுமே 

மனதினால் வந்த நோயடா" 


அதாவது பலம் போயிற்று. அதன் மறு பெயர்தான் நோய் தொற்றிக்கொண்டது எனலாம். 


அதெப்படி மனம் வருத்தப்பட்டால் நோய் வருமா? வருத்தம் மனதோடு போக வேண்டியதுதானே! ஏன் அது உடலில் விளைவை எப்படி உண்டாக்குகிறது. நம் புற அனுபவம் ஏற்க மறுக்கிறது. 


நம் அன்றாட அனுபவத்தில் நம்மைப் பார்த்து ஏன் சுறுசுறுப்பின்றி - சோம்பலாக தெரிகிறாய் என்று ஒருவர் கேட்க, அடுத்தவர் உடம்புக்கு சரியில்லையோ என்று கேட்க இன்னும் ஒருவர் அல்லது இருவர் அதையே தொடர்வரானால், உண்மையிலேயே உடலின் பலம் குன்றி, நோயாளியாக . தயாராகிவிட்டோம் என்று பொருள்தானே! அது ஏன் ஏற்படுகிறது. அது உண்மைதானே என்றால் 100% சதவிகிதம் உண்மைதான். அதனால்தான் இன்றைய மருத்துவ விஞ்ஞானம் "எல்லா நோய்களும் மனதில்தான் தோன்றி வளர்கிறது அல்லது மறைகிறது" என்று நிரூபித்துள்ளது. 


ஆம். மிக மோசமான கேன்சர் நோய் போன்ற வலிகளுக்கு கார்வேட் மெடிக்கல்கள் ஆய்வுப்படி - வலி - வேதனையில் இருப்பவரிடம் மிக வீரியம் மிக்க வலி நிவாரணி (பெத்தடின், ஓபியம், ஹெராயின்) சொட்டுக்களை இது வலியைப் போக்காது ஆனால் நோய் போய்விடும் என்று சொல்லிக் கொடுத்ததால் அது வலியைப் போக்கவில்லை. அதே போல் வெறும் உப்புக்கரைசலை இது ஹெராயின் உங்கள் வலி உடனே போய்விடும் என்று 'செலையின்' கொடுத்ததில் வலி உணர்வு கட்டுக்குள் வந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல் இருதய அறுவை சிகிச்சையிலும் 600 பேர்களிடம் 300 பேருக்கு உண்மையிலேயே சிகிச்சை செய்யப்பட்டும் 300 பேருக்கு உணர்விழக்கும் மருந்து கொடுத்து ஆபரேசனுக்கான அறிகுறி மட்டும் செய்யப்பட்டு தையல் போடப்பட்டதில் உண்மையான ஆபரேசன் செய்யப்பட்டவர்கள் அதன் பக்கவிளைவுகளுடன் வாழ்ந்தவர்கள். பல உறுப்பு செயலிழப்பு அடைந்தவர்கள், இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆபரேசன் (அறுவை சிகிச்சை செய்யாமலேயே செய்தது போல் மேலே மட்டும் தையல் போட்ட அனைத்து இருதய நோயாளிகளும் 100% சதவிகிதம் சுகமடைந்ததைப் பதிவு செய்துள்ளார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். 


இத்தகைய ஆய்வுகளில் இருந்து நமக்கு நன்கு தெளிவாகிறது. மனதின் பங்கு உடலில் முழுமையாக செயல்படுவதை உறுதிப்படுத்துகிறது. 


அப்படியென்றால் இந்த உலகத்தில் மருந்துகளே தேவையில்லை. மருத்துவர்கள் மட்டும் போதுமே! என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? ஆம். அது உண்மைதான். அப்படி இருக்கும் வரை, இருந்த வரை, நோய்கள் பலப்பலப் பெயர்களால் பெயர்சூட்டு விழா தேவைப்படவில்லை. பக்கவிளைவுகளும், அதனால் பரிதாபமான சாவுகளும் சப்தமின்றி நடக்கவில்லை மருந்தின் போதையில் ஆட்படாதவர்கள் சுய உணர்வுடன் இருந்ததால் அவர்கள் தம்முடைய இறப்பைக் கூட முன்கூட்டியே கணிக்க, திட்டமிட, செயல்பட முடிந்தது. இன்று அது நிகழ வாய்ப்பில்லை. மருந்துகளால்,  மருத்துவர்களால் சோதனைகளால் சுயத்தை, சுய உணர்வை பகுத்தறியும் தன்மையை மந்தப் படுத்தப்பட்டதால் சத்தமின்றி சாவு Silent Death என்பார்களே அதுதான் நடக்கிறது. இங்கு நாம் எதையும் திட்டமிட முடியாது. ஏனெனில் 25 வயதிலும் இருதய நிறுத்தம் வரலாம். 75 வயதிலும் வரலாம். ஏனெனில் உடம்பில் உள்ள பாதுகாப்பு அரண்கள் மருந்துகளால். மருத்துவர்களால் மற்றும் பரிசோதனைகளால் தகர்க்கப்படுகின்றன. பயமுறுத்தப்படுவதால் நம் உடலின் செல்களில் சுருக்கமும் அதிர்வும் இயக்க மாற்றமும் நிகழ்வது இயல்பு. இதன் விளைவு தான் நம் மனதில், உடலில் உண்டாகும் கழிவுகள் தடையின்றி வெளியேறுவது தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ தடுக்கப்படுகிறது. அதாவது, நமக்கு எப்போதாவது பயம் வந்தால் வேர்வையோ அல்லது சிறுநீரோ வருவது நாம் அறியாததல்ல. ஆனால் அதுவே அடிக்கடி நிகழ பயமோ, ஆக்ரோசமோ, கோபமோ, வஞ்சமோ, இருக்கும் சமயம் உடல் கழிவுகள் எல்லாம் வெளியேறுவது தடுக்கப்படும். அதாவது பசி, தாகம் தெரியாததோடு. வேர்வை, சளி, சிறுநீர், மலம், கண்ணீர் வெளியேறும் உணர்விழப்பதோடு, உடலின் தோலில் இறுக்கம் ஏற்பட்டு சுவாசமும் தடுமாறி இயங்கும். இத்தகைய நிலையே நோய்க்கு விதை போடும் நிலை. இந்த மனநிலை அடிக்கடி நிகழ, நிகழ விதை முளைத்து மரமாகிவிடும் என்பதை அறிந்துகொண்டால் நோயின் தோற்றம் உணர இயல்பான நம்முடைய சுய உணர்வு போதும். இதன் விளைவாக உடல் கழிவை சுமக்கும் நேரமெல்லாம் நோய் வெளியில் தெரியாமல் வளர்ந்துவரும் காலமாகும். கருவிகளால் காண்பதெல்லாம் நோயின் முற்றிய, வெளிவந்த நிலையேயன்றி ஆரம்பத்தை அல்ல. அதனால்தான் வெட்டி எறிவதையன்றி வேறு வழியில்லை என்கிறார்கள். 


வாழ்வோம் வளமுடன்! 

மகி இராமலிங்கம். 



SHARE THIS:


Related Articles

Treatment Center Locations