நவீன விஞ்ஞான காலத்தில் நம்மை மலைக்கவைக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகள், பயன்பாட்டுக் கருவிகள், வாகனங்கள், வான ஊர்திகள், சீறும் இராக்கெட், மனித சமுதாயத்தை அழிக்கும் அணுவிசை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இவையல்லாம் பிரம்மிப்பானவைதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லவே இல்லை. இதன் உபயோகத்தை நாம் நிச்சயமாக அனுபவிப்பதில் சந்தோஷிக்கிறோம். அவற்றால் மன நிறைவும், உடல் சந்தோசம் அடைவதும் உண்மைதான். ஆனால் இவற்றை நம் உடலுக்குள் சொருகி, குத்தி, தைத்து, உள்ளே வைத்து இயங்க வைப்பதையும் நாம் விஞ்ஞானப்பூர்வமானது என்று நினைப்பதுதான் வேதனைக்குரியது. உண்மையில் அது விஞ்ஞானப்பூர்வமானது என்றால் இறந்த எந்த ஒரு மனிதனையாவது குறைந்தபட்சம் ஒரு வாரம் அவனின் வாழ்நாளை நீட்ட முடியுமா என்றால், நிச்சயமாக முடியாது. ஏனெனில் உயிருடலில் நம் கருவிகளின் இயக்கம் மனவுணர்வுக்கு இணக்கமாக இயங்க இயலாது. ஏன் இயங்காது என்றால் - நம் ஒவ்வொரு உறுப்பும் அதன் இயக்கமும் நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல் நிமிடத்திற்கு இத்தனை முறை இயங்குகிறது என்பது போல் இல்லாமல் நம் மனதின் உணர்விற்குத் தக்கபடி இயக்க முறை கூடியும், குறைந்தும், நின்றும். நிதானித்தும், வேகமாகவும், உள் மன உணர்வுக்குத் தக்கபடி மாறி இயங்கும் தன்மையுடையது.
உதாரணத்திற்கு இருதயம் இயங்கும் விதத்தை எடுத்துக்கொள்வது இருப்பதிலேயே கணக்கிட மிக எளிது.
நம் மனோ நிலைக்குத் தகுந்தாற்போல் இருதயத்தின் துடிப்பு 30 முதல் 250 வரை கூட குறைந்தும் கூடியும் இயங்குவதை பார்த்திருப்போம். அதாவது நீங்கள் தூங்கும் தறுவாயிலும், தூங்கி விழித்த உடனேயும் உங்கள் நாடியைப் பிடித்து 15 நொடிக்குள் எத்தனை முறை துடிக்கிறது என்று ஒரு 10 நிமிடங்களுக்கு ஓரு முறை எடுத்து எண்ணிப் பாருங்கள். அதே போல், மதியம், மாலை சமயங்களிலும். சந்தோசம், கோபம் போன்ற மன உளைச்சல் உள்ள சமயங்களிலும் அதே 15 வினாடிக்குள் எண்ணிப் பாருங்கள். அதன் எண்ணிக்கை 2 அல்லது 3 மடங்கு கூடி இருக்கலாம். இன்னும் உடல் தன்னைச் சமப்படுத்த முயற்சிக்கும்போது அதாவது சுரத்திலும், உடல் உபாதையின் வலிகளின்போதும், அடிபட்ட போதும் அதே துடிப்பின் எண்ணிக்கை 3-4 மடங்கு கூடியிருப்பதை அறியலாம்.
குழந்தைகளின் சுரம் சமயத்தில் பார்த்தால் நாடியின் எண்ணிக்கை ஒரு நிமிடத்தில் 150 முதல் 250 வரை இருப்பதை மருத்துவ உலகம் நன்கு அறியும். இதை அளக்க கருவியும், இரத்த அழுத்தத்தை அளக்க கருவியும் இன்னும் எண்ணற்ற கருவிகளையும், கையாளும் மருத்துவ உலகம் விஞ்ஞானப்பூர்வமானது என்று விளம்பரம் செய்து கொள்வது எவ்வளவு கேலிக்கூத்தானது என்றால் இந்த அடிப்படை மாற்றம் கூட உணர்த்தப்படாததாக இருப்பதுதான்.
நாம் நினைக்கலாம் - நமக்கு அக்கருவிகள் மிகத் துல்லியமாகத்தானே காட்டுகின்றன அதில் அறிவியல் நமக்கு பயன்படுகிறதல்லவா என்கிறார்கள் என் நண்பர்கள். எண்ணிக்கையை
வைத்து என்ன செய்யப்போகிறோம் என்பது தான் முக்கியமே தவிர, எண்ணிப் பார்த்து அதை சாதாரண மனநிலையில், உடல் நிலையில் உள்ளவர்களுக்கு இணையாகக் கொண்டு வர முயற்சிப்பதிலேதான் நாம் நம் உடம்பின் உள்வேலையில் - தானியங்கி வேலையில், உயிர்ச்சக்தியின் வேலையில் குறுக்கீடு செய்கிறோம். அதனால் என்ன ஆகிவிடப்போகிறது என்கிறீரா? உதாரணத்திற்கு ஒருவர் நான்கு நாட்கள் தூங்கவில்லை - என்ன நடந்திருக்கும்- அவ்வுடலில் உண்ட உணவு முறையாக செரித்து, முறையாக கழிவு பிரிக்கப்படாமல், தேங்கி நஞ்சாகியிருக்கலாம். அவை உடலில் தங்கிவிட்டால் உடனே நோய்க்கு ஆட்படலாம். ஆகவே அதை வெளியேற்ற தற்சுழற்சி வேகத்தை ஒவ்வொரு உயிர் அணுவும் சுழற்சியில் கூடி சூடாகி வெளியேற்றும். எனவே தான் தூங்காத உடலில் உஷ்ணம் கூடியிருக்கும். இது தெரியாதவரை சூட்டைக் குறைக்க, அதாவது காய்ச்சலைக் குறைக்க உடலின் செயலை, சக்தியை அழிக்க மருந்துண்டால் கெடுதலில் தான் முடியும்.
எந்த ஒரு பொருளைக் கொண்டும் மருந்தாக பயன்படுத்தி உடலில் உயிர்ச்சக்தியை அதிகரிக்க முடியாது - உணவைத் தவிர. மருந்தைக் கொடுத்தால் உயிர்ச்சக்தி சேதமடையுமே தவிர, ஊக்கம் பெறாது. அதனால் தான் அதிக இரத்த அழுத்தத்திற்கு மருந்து கொடுத்து குறைக்க முடியுமே தவிர குறைந்த இரத்த அழுத்தத்தை கூட்டமுடிவதில்லை.
மற்றபடி உயிர்ச்சக்தியின் இயக்கத்தை திசை திருப்ப முடிகிறது மருந்துகளால் - அதாவது உயிர்ச்சக்திக்கு அதன் (முதன்மை) முக்கியத் தேவையை உணர்ந்து, அதில் இருக்கும் (உ-ம்) சுவாசம், இருதய இயக்கம், உடல் முழுக்க இருக்கும் தானியங்கி தசைநார்கள் இவையாவும் தன் இயல்பில் உயிர்ச்சக்தியின் சேதமடையாத வழியில் இயங்குவது அதன் இயல்பு. அதைவிட்டு நாம் மருந்துப் பொருளால் நம் கணிப்புப்படி, நம் விருப்பப்படி மாற்றிவிட்டோம் என்றால் உயிர்ச்சக்தியில் பங்கம் (கேடு) ஏற்படும்.
எடுத்துக்காட்டாக நாம் உண்ணும் உணுவு நன்றாக செரிக்கவேண்டும் என்பதற்காக நாம் ஜீரண தூண்டி (Tonic) சாப்பிடுவதாக வைத்துக்கொள்வோம். அதன்பின் என்ன நடக்கும் என்று பார்த்தால், தானே சுரக்க வேண்டிய ஜீரண நீர்கள், பலவந்தமாக - வேகமாக சுரக்க வைக்கப்படுவதால், உடல் முழுக்க ஒரு ஒட்டுமொத்த சோம்பலையோ அல்லது தூக்க நிலையையோ ஏற்படுத்தும். அதாவது கல்லீரல் பலவீனமடையும். ஏனெனில் இயல்பாக சுரக்க வேண்டிய ஜீரண நீரை அடித்து சுரக்க வைப்பதுதான் (Tonic) என்ற உண்சாராயம் கலந்த அந்த பொருளினால் விரைவான நொதித்தலில் வயிறு தடுமாறி மிக துரிதமான சுரப்பை செய்ய வேண்டியதால் உடல் சமநிலை கெடுகிறது. சமநிலையில்லாத உடல் ஆரோக்கியம் கெட்ட உடலே. நம் உடலில் உயிர்ச்சக்தி சமநிலை (Homeostatic) தவறாத அளவு எப்பொழுதும் இருக்க உடல் முழுக்க தானியங்கி சக்தி இயற்கையாக இயங்கிக்கொண்டு இருப்பதுதான் அதன் இயல்பு என்பதை நாம் அறிந்தால் ஒரு ஜீரண ஊக்கி (Tonic) யால் உண்டாக்கும் உடலின், உயிர்ச்சக்தியின் சிதைவை உணரலாம். புரிந்து கொள்ளலாம். ஜீரண தூண்டிக்கே இந்த நம் உடலின் நிலை இதுவென்றால், மருந்துகளால் என்னவாகும்? நாம் இனி ஒவ்வொரு வலியும் வரும்போது நாம் பயன்படுத்தும் மருந்துகளால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். தலையில் வலிக்கிறது என்றால் நாம் உடனே ஒரு மருந்து சாப்பிடுகிறோம். தலைவலி தெரிவதில்லை. இது நல்லதா? வலி என்ற உணர்வு நமக்கு உணராமல் இருப்பது நல்லது என்று தான் அனைவரும் நினைக்கிறோம். ஆனால் அந்த வலி எப்படி போனது, அல்லது மறைந்தது என்று நாம் அறிந்திருந்தால் அதை விரட்ட மருந்து என்ற வித்தை சாப்பிடவோ, மேற்பூச்சாக பூசவோ செய்யமாட்டோம். அப்படியென்றால் வலி ஏன் வருகிறது என்பதை இன்றைய மருத்துவ அறிஞர்களே கண்டறிந்து சொல்வதென்னவென்றால் எங்கெல்லாம் நம் உடல்திசுக்களில் தேவையற்ற நம் உயிருக்கு கேடு செய்யும் விஷக் கழிவுகள் சேர்ந்துள்ளதோ அதை வெளியேற்றாமல் உடலும், உயிர்ச்சக்தியும் ஓய்வதில்லை. ஆகவே, அதை வெளியேற்றும் செயலில்தான் அது வலியாக நம்மால் உணரப்படுகிறது. அது ஏன் வலியாக உணர்த்த வேண்டும். எளிய முறையில் உண்டான கழிவானால் அதை சிறுநீராகவோ. மலமாகவோ, வேர்வையாகவோ. சளியாகவோ, கண்ணீராகவோ எளிதில் வெளியேற்றுவது உயிர்ச்சக்தியின்அன்றாட அடிப்படைப்பணி. அப்படி வெளியேற்ற முடியாத அத்தகைய காலம் கடந்த கழிவுகளாக மாற்ற முடியாதவைகளை உடல் திசுக்ககளில் தங்கிய, கிரகிக்க முடியாத - தேங்கிய கழிவுகளை வெளியேற்றும்போது அங்கு இணக்கமான, இயல்பான செயல்பாடு இருக்கும்போது அவை மிதமான வலி உணர்வோடு வெளியேறிவிடும். அதையே நாம் நம் உடலின் - உயிரின் - உணர்வின் தேவையை இயல்பாக இருந்து உணர்ந்து வேறு எந்த வேலையையும் நம் உடலிற்கு, மனதிற்கு கொடுக்காமல் விட்டுவைக்கும் போது அந்த மிதமான வலியும் இதமாக மாறிவிடும். இதை விடுத்து இந்த மிதமான வலிக்கு மருந்துப்பொருள், இரசாயன கலவையோடு உணவு என்று எடுத்துக் கொள்ளும்போது தான் நம் உயிர்ச்சக்தி அந்த தேங்கிய கசடை வெளியேற்றும் செயலை விட்டு இந்த மருந்து விஷம் இரசாயனங்களால் நிலைகுலைந்து செய்வதறியாது பலவீனமடைகிறது. அதன் விளைவாக. அழுக்குடன் மருந்து இரசாயனங்களும் சேர்ந்துகொள்கின்றன. மீண்டும் உயிர்ச்சக்தி தன்னை பலப்படுத்திக்கொள்ளும் காலம் வரை அதாவது சுமார் 2-3 வாரங்களில் இருந்து, 2-3 மாதங்களுக்கு, சிலருக்கு 6 மாத காலம் கூட எடுத்துக்கொள்ளும். அவரவர் உடலின் - உயிர்ச்சக்தியின் வலிமையைப் பொறுத்தது. அத்தகைய பலம் பெற்ற உயிர்ச்சக்தி மீண்டும் தன் வெளியேற்றும் செயலில் ஈடுபட முயற்சிக்கும்போது மீண்டும் வலியை நாம் உணர்வோம். அல்லது கடுமையான காய்ச்சல் வந்து, வாந்தி, பேதி கூட உண்டாக்கும். ஆக காய்ச்சல் என்பது, கழிவு கசடுகளை உடல் திசுக்களில் இருந்து வெளியேற்ற வெப்பநிலையை உயர்த்துவதால் வேலை எளிதில் நடத்தப்படும் என்பதற்காகத்தான். நாம் அதை உணராமல் வாந்தி, பேதி, சுரத்தை அடக்கும் மருந்து உண்டால். உயிர்ச்சக்தி திணறிப்போய் செய்வதறியாது தடுமாறும். அப்படி ஒவ்வொரு முறை சுரத்திற்கும், வாந்தி பேதிக்கும் மருந்து உண்டதாலேயே, விதவிதமான கசடும். விதவிதமான விஷத்தேக்கமும் உடலில் சேர்வதால் மீண்டும் மீண்டும் முன்பைக் காட்டிலும் மிக அதிகமான சுரமும், கடுமையான வலி, வேதனையுைம் ஏற்படுத்தும் உச்சபட்ச நோயாக மாறுகிறது.
இப்படி தேக்கமுற்ற கழிவுகளை, கசடுகளை, விஷங்களை வெளியேற்ற முடியாமல் தடுமாறும்போது உடலில் எல்லா சுரப்புகளும் தன்னை அதற்கேற்றாற்போல் தகவமைக்கிறது. அதைத்தான் நாம் வெவ்வேறு பெயர் வைத்து கேஸ்டிஸ். (பிட்யூட்டரி, அட்ரினல்), தைராய்டு. ஆர்தரைட்டிஸ், நெப்ரைட்டிஸ். அப்பெண்டைடிஸ் என்று கூறுகிறோம். இதேபோல் தான் சுரங்களுக்கும் பெயர்வைக்கப்படுகின்றன. இயற்கை மருத்துவக் கோட்பாடு இதைத்தான் தெளிவாக்குகிறது. உட்கிரகித்தலும், வெளியேற்றமும் ஒரே நேரத்தில் நிகழ்வதில்லை. தேங்கிய கசடுகள் வெளியேறும்போது பசிக்காது. உடல் சோர்வாக இருக்கும். வலி, வேதனை கசடின் விஷத்தன்மையைப் பொறுத்து அதிகமாகவோ. குறைந்தோ இருக்கும். அதே போல், நம் உயிர்ச்சக்தியின் பலத்தைப் பொறுத்து அது கூடியும். குறைந்தும் இருக்கும். ஆகவே, வலியின் போதும் வேதனையின் போதும். பசிக்கும் வரை உண்ணாமல் ஓய்வில் இருந்தால்தான் குணமாதல் இயல்பாக எளிதாகும்.
நமது உடல் அதிகபட்சம் நீரால் ஆக்கப்பட்டது. மீதம் உள்ள அனைத்து மூலகங்களும் நீரின் கலவைகளேயாகும் என்பது இன்றைய நம் மருத்துவ விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு. நீரின் தன்மையைப்பற்றி ஆராய்ந்தால் நம் மனதின் தெளிவிற்கு ஏற்றாற்போல் நீரில் நிலைப்பாட்டில் தெளிவும், செறிவும் ஆக இருப்பது அதன் இயல்பு என்பதையும். அதன் தன்மைக்குத்தக்கவாறு நம் மனதில், செயலில் உணர்வும் வெளிப்படுத்துபவை என்றும் நிரூபணம் செய்துள்ளார்கள் இன்றைய விஞ்ஞானிகள். நீருக்கும் நிலவுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்றும். நிலவுக்கும் மனதுக்கும் நேரடி தொடர்புண்டு என்றும், நம் முன்னோர்கள் உணர்ந்ததால்தான் அம்மாவாசை, பௌர்ணமி நாட்களில் மனிதனின் மனதில் இருவேறு மாற்றங்கள் உண்டாகும் என்பதை உணர்ந்து, அச்சமயங்களில் மனதில், உடலில் கடுமையான வேலைகளில் ஈடுபடாவண்ணம் இருக்க ஆன்மீகச் சிந்தனைகளைச் சிந்திக்கச் செய்தனர். இலங்கை போன்ற நாடுகளில் அச்சமயங்களில் அரசு விடுமுறையாகக் கூட கடைப்பிடிக்கின்றனர்.
பௌர்ணமி சமயம் நீரின் மிகப் பிரம்மாண்டமான இருப்பான கடல் கொந்தளிப்பதையும், அதன் அளவில் மேல் எழுந்து கடல் பொங்குவதாக தெரிவதையும் நாம் பார்த்திருப்போம். அதே சமயம் நம் பூமிக்கும் நிலவுக்கும் அமையும் தூரத்தில் அதிகபட்சமாக தள்ளி நிற்கும் சமயம் அதாவது அம்மாவாசை நாளில் கடல் உள்வாங்குவதையும் காணலாம். இதிலிருந்து நாம் அறிய வேண்டியவை சந்திரனின் நெருக்கத்திற்குத் தக்கவாறு அதன் ஈர்ப்புசக்தியில் திணிவு கூட அதனால் ஈர்க்கப்பட்ட நீர் தன் தன்மையில் விரிவடைவது இயல்பு. அந்த நிகழ்வு ஒவ்வொரு உயிருடலிலும் நடக்கும். ஏனெனில் எல்லா ஜீவன்களும் பெரும்பான்மையாக நீரின் மூலக்கூறுகளால். நீரால் ஆனவையே. அதேபோல் நமக்குள்ளும் இந்த நிலாவின் ஈர்ப்பு சக்திக்குத் தக்கவாறு நம் உடலில் உள்ள நீர்மம் ஆன இரத்தத்தில் அதன் தன்மையில் பெருக்கமும் சுருக்கமும் நடந்தே தீரும். அதாவது இரத்தத்தின் அடர்த்தி கூடவும் குறையவும் செய்யும். அதற்கேற்றாற்போல் இரத்த ஓட்டம் கூடவும் குறையவும் தான் செய்யும். மேலும் இரத்தத்தின் அடர்த்தி கூடும்போது அதன் எடுத்துச் செல்லும் தன்மையில் மாற்றம் உண்டாகியே தீரும். அடர்வு - திணிவு குறைவாக உள்ளபோது அதனோடு அதிகபட்ச பொருள்களை ஈர்ப்பதும், எடுத்துச் செல்வதும் (நகர்த்துவதும்) இயல்பு. அந்த சமயத்தில் எளிதில் நம் உடலில் வளர்ச்சியும், சிதைவும் வேகமாக, அதாவது ஆரோக்கியமாக மாற்றும் நடவடிக்கைகள் அமைய ஏதுவாக இருக்கும். அதற்கு மாறாக அடர்த்தியான, திணிவாகவுள்ள இரத்தத்தில் சத்துப் பொருட்களையோ (செரித்துக் கிடைத்த சத்துக்களையோ), உடலின் உயிர் அணுக்களில் நிரம்பிய கழிவுப் பொருட்களையோ கடத்த. எடுத்துச் செல்ல எளிதில் இயலாத நிலை ஏற்படும். ஏனெனில் ஏற்கனவே அது அடர்ந்து, திணிவாக இருக்கும் பட்சத்தில் மற்றவற்றை (சத்தையும், அழுக்கையும்) அனுமதிக்காது என்பதை அறிய வேண்டும். எனவே அமாவாசை நாட்களில் எளிதில் செரிக்க இயலாததை, கடினமான உணவுகளை உண்ணக்கூடாது. அதைத்தான் நம் முன்னோர்கள் அமாவாசை விரதம் என்று கடைப்பிடித்தார்கள். அந்த நாட்களில் மனிதர்களின் உடலில் ஏற்படும் நீரின் மாற்ற நிகழ்வுகளால் உடல் சூடு அதிகரிக்கும். அதன் விளைவாக மனநல சீர்கேடு ஏற்பட்டு காம இச்சைக்கு அதாவது சிற்றின்ப சுவைக்கு ஈர்க்க அல்லது உந்தப்படுகிறது மனம். எனவே தான் அமாவாசை. பௌர்ணமி போன்ற நாட்களில் உடல் நலத்திற்காகவும், மனநலத்திற்காகவும் நம் முன்னோர்கள் ஆன்மீக நாட்டத்தை உருவாக்கி, அதற்கொரு கோட்பாடு வகுத்து, மக்களின் மனதை திசை திருப்பினார்கள் என்பதே காரணம்.
நமது நலமும், வளமும். திடமும் நாம் உண்ணும் உணவு சக்தியாக மாற்றப்பட்டு உடலில் உயிர் அணுக்களில் அச்சக்தி திணிவு பெற வேண்டும். அச்செயல் நடக்க சத்துப் பொருட்களையும், கழிவுப் பொருட்களையும் கடத்தும் நீர்மப் பொருளின் நிலையைப் பொறுத்ததே அன்றி, நாம் உண்ணும் சத்தை மட்டும் பொருத்தல்ல என்பதை உணர வேண்டும். காரணம் இரத்தத்தின் ஓட்டம் (பாய்மம்) அதாவது அதனுடைய ஓடும் தன்மை அதன் மேல்தள இறுக்கத்திற்குத் தகுந்தாற்போல் மாறும் என்பது பெளதிகக் கோட்பாடு. அதாவது, பாதரசத்தின் / எண்ணெயின் வேகத்திற்கும் நீரின் வேகத்திற்கும் நிச்சயமாக மிகப்பெரிய வேற்றுமை உண்டு என்பதை நன்கு அறிவோம். அதேபோல | பாதரசம் / எண்ணெய் தன்னோடு எதையும் சரியாக கலந்துகொள்ள அனுமதிக்காது. ஆனால் நீர் அப்படி அல்ல என்பது போல இரத்தத்தின் தன்மை எப்போதெல்லாம் மேல்தள இறுக்கம் இறுகியும் நீர்த்தும் போக வாய்ப்புள்ளது என்பதைச் சற்று சிந்திப்போம். மனம் தளர்வாக, மகிழ்வாக, இயல்பாக, ஏற்கும் தன்மையோடு (பிடிவாதமின்றி. கோபமின்றி, பயமின்றி, வேதனையின்றி, பெருமையின்றி) இருக்கும்போது நிச்சயமாக நீரின் இயல்பு மேல் தளத்திணிவு குறைந்து (அடர்வு) மென்மையாக மாறும். அதனால் வினைபுரிதல்- அதாவது அதன் ஈர்த்துச் செல்லும் செயலில் தெளிவும், மேன்மையும், நேர்த்தியும் இருக்கும். அதன் விளைவாக வயிற்றில் செரித்த சத்துக்களை உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் மென்மையாக இயல்பாக கொண்டு சேர்த்து, அங்கு கிடைக்கும். அழுக்குப் பொருட்களை திரும்பப் பெற்றுக் கொண்டு வந்து கழிவு உறுப்புகளான நுரையீரல், தோல், சிறுநீரகம் என்று எல்லா கழிவு மண்டலங்களுக்கும் சேர்த்து அக்கழிவுகளை எளிதில் பிரிக்க உதவிகரமாக அமையும். அதன் விளைவாக உடல் நலம் காப்பதோடு மனவளம் பெருகும். வாழ்வும் வளமாகும்.
நமது பாய்மப் பொருளான இரத்தம் நாம் உணர்ச்சி வசப்படும்போது அதன் மேல் தளம் இறுகி எடுத்துச்செல்லும் இயல்பை இழந்துவிடுகிறது. அதாவது நாம் கோபம், பயம், வேதனை, துக்கம், பெருமை மற்றும் கவலைப் படும் சமயத்தில் இரத்தத்தின் மேல் நிலை இறுக்கம் கூடுவதால் (Surface Tension) எதையும் தன்னுடன் எளிதில் சேர அனுமதிக்காததால், உடலில் கழிவுப் பொருள் பிரித்தலும் சத்துப் பொருள் சேர்தலும் அதன் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும். விளைவு சோர்வும், அயற்சியும், பலவீனமும் ஏற்படும். இதுவே பழக்கமாகிவிட்டால், அதாவது, கவலைப்படுவது, கோபப்படுவது என்று இயல்பாக்கிக் கொண்டால் தற்செயலாக நின்ற கழிவுகள் தொடர் நிகழ்வாக மாறி, வியாதிக்கு வித்திட்டு வளர ஆரம்பிக்கும். பின்னாளில் அதனையே தீராத. தீர்க்க முடியாத வியாதி என்று பெயர் வைக்கிறோம்.
குறிப்பு : Emoto என்ற ஜப்பான் நாட்டு விஞ்ஞானி நீரின் பலவிதமான வடிவமைப்பு மாற்றங்களை நம் எண்ணத்திற்கும், சொல்லுக்கும் மாற்றும் வல்லமையுள்ளது என்பதை நிரூபணம் செய்துள்ளார்.
நம் முன்னோர்கள் நீர் மட்டும் உணர்வேற்றிக் கொடுத்து தீர்க்கமுடியாத வியாதிகளையும் தீர்த்துள்ளார்கள். இது நம் முன்னோர்களின் இயல்பான செயல். சாதாரணமாக நீரின் (Surface Tension) மேல்நிலை இறுக்கம் 73 dynes/cm² என்று இருப்பதை, அவர்களின் எண்ணத்தின் வலிமையால் 48 dynes/cm² என்று குறைவதால்தான் நோய்கள் குணமாகின்றன என்பதையும் மேன்மையான எண்ணத்தால், தளர்வால், இயல்பான மன இறுக்கத்தைத் தளர்த்துவதால் நீரின் மேல்நிலை இறுக்கம் குறைகிறது என்பதையும் இன்றைய விஞ்ஞானிகள் நிரூபணம் செய்துள்ளனர்.
தீராத வியாதிகளையும் நம் முன்னோர்கள் எளிதாக குணப்படுத்த உதவியது தம் திண்ணிய எண்ணத்திணிவில் நோய் நீக்கிப் பொருளாக மாற்றியது நீரைத்தான் என்பதை அறிவோம். ஆம், நம் முன்னோர்கள் உடல் நலம் குன்றியவர்களுக்கு சிறிய பாத்திரத்தில் நீரை எடுத்துக்கொண்டு அதை மானசீகமாக இரக்கப்பட்டு உணர்வேற்றி வழங்கப்பட்டதன் விளைவாக எண்ணற்ற நபர்கள் நலமடைந்ததை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
மெஸ்மரும் இதையே வெளியிலிருந்து எதை உட்செலுத்தாமல் மென்மையாக தொடுவதால் நீரின் - நீர்மத்தின் - இரத்தத்தின் இயல்பு மாறுவதை உணர்ந்ததால் தான் என்னவோ முதலில் தான் தொட்டும். அதற்குப்பின்னர் நோயாளிகள் தன்னைத் தொட்டும், அதற்குப்பின் நோயாளிகள் தான் மனதால் திணிவேற்றப்பட்ட மரத்தைத் தொட்டும் குணமானதை வரலாறு கூறுகிறது.
அதை அறிவியல்பூர்வமாகவும், நம் அனுபவ அறிவாலும், விளக்கிப் புரியவைக்கும் விஞ்ஞானப்பூர்வமாகவும் அறிய, நீரின் மேல்தள இறுக்கம் 73 dynes/cm² சாதாரண நிலையில், அதாவது நாம் உணர்ச்சியின் வசப்பட்டு உறையும் போது (Freeze) தள இறுக்கம் கூடியும். நாம் தளர்வாக, இயல்பாக, இனிமையாக, ஆர்வமாக இருக்கும் சமயம் இரத்தத்தில் தள இறுக்கும் குறைந்து 48 - 58 Dynes/cm² ஆக மாறுவதை மருத்துவ விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளார்கள். மேலும், சான்றாக, நம் பயன்பாட்டறிவுக்கு, பட்டறிவுக்கு, அனுபவ அறிவுக்கு வருவோம். கடுமையான நோயால் பீடிக்கப்பட்டோரும் மென்மையான அக்குபங்சர் தொடுதலுக்குப்பின் உடனடி நிவாரணம் பெறுவது மிக இயல்பாக நடந்துகொண்டிருப்பதே இதற்கு மேலான ஆதாரம்.