ஆரோக்கியம் என்பது உடலும் மனமும் ஒன்றுடன் ஒன்று மறைமுகமான, நேரடியான தொடர்புடன் இருந்துகொண்டு, ஒன்றையொன்று சார்ந்தும். ஒன்றையொன்று தொடர்ந்தும். உணர்த்தியும் இருப்பது இயல்பு. மனம் உடலை மாற்றும். உடல் மனதை மாற்றும் தன்மை உடையது. (உ-ம்) உடலுக்கு சுரம் வந்தால் இறந்துவிடுவோமா என்பது மனம். அறிவுடைய மனமோ “இல்லை இல்லை" என் பழைய நோய்களையெல்லாம் பொசுக்கி என்னை அழகான, ஆரோக்கியமான உடலையும் அதனால் ஆரோக்கியமான மனதையும் பெறப்போகிறேன் என்றுணரும்.
"Strength is Life Weakness is Death"
Swami Vivekananda
உடலின் வலிமை மனதின் தெளிவு! மனதின் தெளிவு உடலின் உறுதி! ஆரோக்கியமான உடல், அமைதியான மன நிலை. மனதின் பதட்டமின்மை, உடலின் திடம் ஆக மனதுக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பு கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள தொடர்பு போலவும், பூவுக்கும் வாசத்திற்கும் உள்ள நெருக்கம் போன்றதும் ஆகும்.
வாழ்க்கையின் வெற்றியும், நிறைவும் அமைதியும் தன்னைச் சார்ந்தவர்கள் மேல் வைத்துள்ள அன்பும் அனுசரணையும், அரவணைப்பும், விட்டுக்கொடுத்தலும், அவர்கள் தவறையும் பொருட்படுத்தாது பொறுமையோடு அடுத்த தவறு ஏற்படாத வண்ணம் வழிகாட்டுதலும்தான் அன்பும் பண்பும் நிறைந்தவர்களின் மேன்மையான குணம். அதுவே அன்பானவர்ளின் அணுகுமுறை. அதனால்தான் அன்பால் சாதிக்க முடியாதது ஒன்றும் இல்லை. அன்பு ஆண்டவனுக்கு ஒப்பானது.
27
"ஐயப்படாது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்புக் கொளல்" - குறள்
ஆரோக்கிய தேடலில் அன்பைத் தொலைத்து, ஆண்டவனை மறந்து, அனுமானங்களைப் படித்து வந்தவர்களை நம்பி நம் உயிரையும் உடலையும் சந்தேகம் கொண்டு, பரிசோதனைகளை செய்ய அனுமதித்து. கதிரியக்கத்தாலும், வேதிப் பொருட்களாலும் உடலின் உயிர் காந்த சக்தியை (திணிவை) குலைத்து உயிருக்கும் உடலுக்கும் உள்ள நெருக்கத்தை நொறுக்கி, உடலில். மனதில் நோய் பரவச்செய்து உடலுக்கும் மனதிற்கும் உள்ள தொடர்பைத் துண்டிக்கும் வேலையை (Divorce) மண முறிவு செய்துகொள்கின்றனர் இன்றைய நாளில்.
மனைவி கணவனை சந்தேகப்படுவதும், கணவன் மனைவியை சந்தேப்படுவதும் எவ்வளவு கொடுமையோ அதைவிடக் கொடுமை ஓர் உடலின் மேல் உயிராற்றலின் மேல் சந்தேகம் என்ற நிலையில் சோதனைகள் செய்வது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
அன்பு கடவுள் எல்லையற்ற படைப்பாற்றல் கொண்டது. அன்புக்குக் கட்டுப்படாதவர் ஒருவரும் இல்லை. உடலும், உள்ளமும் கூடத்தான்.
"அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்" தடுத்து நிறுத்த முடியாததுதான் அன்பு.
அன்பு நிறைந்த இடம் தாய்மை நிறைந்த இடம்
- கடவுள் தன்மையான இடம்
அன்பு அனைத்தையும் ஆக்கும், படைக்கும், வேண்டாததைப் போக்கும்.
அன்பே பலம்!
அன்பே நலம்!!