அக்குபங்ச்சர் மருத்துவம் - கவிதை.

Posted by Admin on 06-10-2018 8:41 PM

அக்குபங்ச்சர் மருத்துவம்


இயற்கை தந்த மருத்துவமே-இது

மருந்தில்லா மருத்துவம்


மனமாற்றமே மருத்துவம்- இது

மகத்தான மருத்துவம்


அண்டம் தந்த மருத்துவம்- இது

பிண்டத்திற்க்கான மருத்துவம்


நன்மை அறியும் மருத்துவம்- இது

நமக்கான மருத்துவம்


அச்சம் தவிர்க்கும் மருத்துவம்- இது

அற்புதமான மருத்துவம்


பசி அறியும் மருத்துவம்

கழிவு நீக்கமே மருத்துவம்- இது

கனவு தரும் மருத்துவம்


குணநலமே  மருத்துவம் - இது

குலம் காக்கும் மருத்துவம்


அகம் சிறக்கும் மருத்துவம் - இது

அழகாக்கும் மருத்துவம்


ஊனுடம்பை ஆலயம் ஆக -

இது உணர வைக்கும் மருத்துவம்


எளிமையால் நம்மை இது

ஏற்றமளிக்கும் மருத்துவம்


உணர்வால் நம்மை - இது

உயர வைக்கும் மருத்துவம்


மனிதகுலம் இனிது வாழ

ஆரோக்கிய வாழ்வு வாழ

அக்குபஞ்சர் மருத்துவம்


R.அருள்ஜோதி , சந்தானகிரிஷ்ணன்

நாகப்பட்டினம்


Related Articles

Treatment Center Locations