மரு உந்து - Magi Ramalingam

Posted by Admin on 4:25 PM

நலம் நாடும் மனிதனின் வாழ்வில் மருத்துவரின் பங்கு மகத்தானதுதான், மறுக்கமுடியாது. ஆனால் இன்றைய நவீன மருத்துவத்தின் வியாபார யுக்தி மனிதர்களை பணம் காய்க்கும் மரங்களாக பார்ப்பதுதான் வேதனையை உண்டாக்குகிறது. எந்த ஒரு மருத்துவர் மனிதனின் நோய் பற்றிய பயத்தை நீக்கி உண்மை நிலையை உணர்த்தி மனதில் நம்பகத்தன்மையை மேம்படுத்துகிறாரோ அவரே சிறந்த மருத்துவர். ஆனால் இன்று நிலைமையே வேறு விதமாக உள்ளது. அதாவது இந்த வயதில் இந்த இந்த நோய்கள் வரலாம் என அட்டவணை இட்டு மக்களை அச்சுறுத்துகின்றனர். இப்படிப்பட்ட மருத்துவ விழிப்புணர்வு என்கிற பெயரால் வெளிவரும் விளம்பரங்களால் மக்கள் செய்வதறியாது மருத்துவமனைகளை தஞ்சம் அடையும் அவலநிலை உருவாகிறது.

அப்படி என்றால் நான் உணரத் தவறியது எதை என்று கொஞ்சம் சிந்தித்தால் உண்மை புலப்படும். நோய் யாருக்கு? நமக்கென்றால் நம்மைவிட அதை உணர்ந்தவர்கள் யாராக இருக்கமுடியும்? மருத்துவராலோ அல்லது நவீன மருத்துவத்தின் வியாபார நோக்கில் கண்டறியப்பட்ட சாதனங்களாலோ நம் சுகவீனத்தை அறுதியிட்டு கூறமுடியுமா? முடியாது என்பதை பின்வரும் எடுத்துகாட்டுகளில் உணர்ந்து கொள்ளலாம்.

உங்களுக்கு இப்போது அகோர பசி இருக்கிறது. இந்த உணர்வை எந்த கருவியை கொண்டும் அளவிட்டு சொல்ல முடியுமா? அதே போல் உங்கள் உடலில் எங்கேனும் ஏற்படும் வலியின் அளவை எந்த கருவியேனும் நமக்கு காட்டுமா? இது முடியாது என்பதனை உணர நாம் எந்த மருத்துவத்தையும் பயில வேண்டிய அவசியம் இல்லை.

Related Articles

Treatment Center Locations