“நோய்க்கு காரணம் கண்டிடு”

Posted by Admin on 15-10-2018 9:57 AM

நோய்க்கு காரணம் கண்டிடு

1. சுகம் சுலபமானது என்பதை தொலைத்து பின் பயத்தில் பெறுபவையே நோய்.

2. ஆனந்தம் அதுவாகவே இருப்பதை மறந்து ஆணவத்தால் பெறுவது வியாதி.

3. இன்பம் இயல்பானது என்பதை விட்டுவிட்டு மனக்கவலையால் அவதி.

4. இப்படி கடுங்கோபத்தால், வேதனையால், சந்தேகத்தால், குழப்பத்தால், உயர்வு தாழ்வு மனப்பான்மையால் அன்றாடம் வளரும் நோய்களே அதிகபட்சம். இதைத்தான் இன்று மருத்துவ விஞ்ஞானம்All disease because of psychosomatic disorders” - “எல்லா நோய்களுக்கும் மனநிலை பிறழ்வே காரணம்என்கிறது.

மனிதன் = மனம் + இதம்.

இதமான மனம்  இன்பமயமானது, இயற்கையானது, ஆரோக்கியமானது, ஆனந்தமயமானது - பிறகு எப்படி நோய் வந்தது?

இதமான மனம் மிதமாகி பகிர்ந்துண்ணும் நிலை மாறி பறித்துண்ணும் பழக்கத்தில் மிருகங்களைப்போல் தன் உயர்வு தெரியாமல் மற்றவர்களின் உடமைகளை, உழைப்பை பறிக்கும் செயலில் ஈடுபட்டதுதான் இதமான மனம் இறுகிய, குறுகிய மனமாக விசாலமின்றி வியாதியை தோற்றுவிக்கிறது. அதை நாம் அன்றாட வாழ்க்கையில் வழக்கத்தில்உங்க நல்ல மனசுக்கு எந்த தீங்கும் வராதுஎன்று பேசாதவர்கள் இல்லை. அதையேதான் பெரியவர்கள், எண்ணம், சொல்லாகி செயலாகி - அனுபவமாக மாறுவதை எடுத்துச் சொன்னார்கள். அதையே பாரதி

திண்ணிய எண்ணம் வேண்டும்

தெளிந்த நல் அறிவு வேண்டும்

நல்லவை எண்ணல் வேண்டும்”   என்றார்.

இன்றைய மனோதத்துவ வல்லுனர்களும் அதையே வலியுறுத்தும் வகையில்என் நோய் போகவேண்டும் என்பதைவிட, நான் ஆரோக்கியமாக, திடகாத்திரமாக, உத்வேகமாக, உற்சாகமாக இருப்பதாக உணரும்படியும், அதை அகக் காட்சிப் படுத்துவதுடன் அதை ஆழ்மனதில் பதியச் சொல்கிறார்கள். ஏனெனில் அவ்வெண்ணம்தான் நம் சொல்லாகவும் செயலாகவும் நம் அனுபவமாகவும் மாறுவதை அவர்கள் அனுபவத்தால் அடைந்ததற்கான எண்ணற்ற சான்றுகள் உண்டு.

சரி, அறிவுசார்ந்த அறிவியல் சார்ந்த விஞ்ஞானம் சார்ந்த கண்டுபிடிப்புகள் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். முதலில் அறிவியல் சார்ந்த அறிவுசார்ந்த சிந்தனையில்

தனிமரம் தோப்பாகாது

ஒற்றுமையே பலம், வெற்றி

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

என்ற அறிவுசார்ந்த சொலவிடைகளுக்கு ஏற்ப தனி மனிதன் தன் தேவைகளை தானே நிறைவு செய்து கொள்ள முடியாது. சமுதாயத்தின் பங்கு இல்லாமல் எதையும் அடைய முடியாது. ஆனால் நாம் சமுதாயத்தை மறப்பதால் துண்டுபட்டுப் போவதால் சுழற்சி நின்றுவிடுகிறது. அல்லது வட்டம் சிறிதாகிறது. சிக்கல் பொpதாகிறது. அதனால்தான் என்னவோ,

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்

தன் பிள்ளை தானே வளரும்

அதாவது சமுதாயப்பார்வை இருந்தால் விரிந்த மனம், மேன்மையான பரந்த அறிவு நிலை - பயம், குற்றம், குறை, கவலை, கோபம், பெருமை அறியாது. அங்கு நோய்க்கு இடமில்லை. இந்த உலகத்தையே சுரண்டும் வல்லரசுகளில் வல்லரசாக இருக்கும் அமெரிக்காவில்தான் இன்று நோயின் தாக்கம் மிக மிக அதிகம். நம் தமிழகத்தைப் போன்று சில மடங்N கஉள்ள ஜனத்தொகையில் 34 வினாடிகளுக்கு ஒரு இருதய நிறுத்த நோய் (Heart Attack) அதாவது 2300 பேர் ஒரு நாளில் அந்த நோய்க்கு ஆளாகிறார்கள். இருதய நிறுத்த நோய் என்பது நேராக இருதயம் மட்டும் கெட்டுப் போனதல்ல. இருதயம் என்ற தாய்மை உணர்வுள்ள உறுப்பு  நம் உடலில் அனைத்து உள், வெளி உறுப்புகளுக்கு வேண்டிய அளவு சத்தை இரத்தத்தின் மூலம் பகிர்ந்து தருவதாகும். அது ஏன் நிற்க வேண்டும்? உடலின் அனைத்து உள், வெளி உறுப்புகளில் அத்தனை அவலமான பதிவு, கெடுதி, இயங்க முடியாமை, பகுத்தறிய இயலாமை. இனி நான் இயங்கி என்ன பயன் என்று முடிவெடுத்த பின் தான் அது நிற்கத் துணிகிறது. அதுதான் இருதய நிறுத்தம். அங்கு அறிவுபூர்வமாக சிந்தித்தால் மனதின் அழுத்தம் - உடல் உள்ளுறுப்புகளை அமுக்கி, அதன் செயல்பாட்டை முடக்குகிறது. அதனால்தான் அமெரிக்கர்கள் தூக்கமின்மைக்கு 41மூ க்கும் அதிகமானோர் தூக்கமாத்திரை பயன் படுத்துபவர்களில் முதல் இடத்தில் இருக்கிறார்கள். இவையெல்லாம் CDC (Center for Disease Control) என்ற அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் அதிகாரபூர்வமான தகவல்.

நம் நாட்டின் சொத்தாக போற்றப்பட்டது நம் உண்மை உணர்வும், இரக்க குணமும், பரிவும், பகிர்ந்துண்ணும் இயல்பும், அகிம்சையும், அன்பும் ஆகும். அதனால் அன்று நமக்கு இன்போல் விதவிதமான நோய்கள் இருக்கவில்லை. அதையே அமெரிக்க உயிரியல் விஞ்ஞானி Dr. புரூஷ்லிப்டன் சொல்கிறார், “நம் உடலில் உள்ள 150 டிரில்லியன் அணுக்களும் ஒன்றோடு ஒன்று ஒத்தும், உதவியும், அரவணைத்தும், அன்பு பாராட்டியும், இரக்கத்துடனும் இருப்பது இயல்பு. அதன் இயல்பு ஒட்டுமொத்தமாக முழு மனிதனிடம் வெளிப்படுவது இயற்கை. அச்செயலனைத்தும் மனதின், உணர்தலில் அறிவால் அமைபவை என்று.

ஆனால் இன்றோ உணவில் விசம், உடல் நலம் காக்கிறோம் என்ற பெயரில் ஏராளமான இரசாயனம், மருந்துகள், இதன் விளைவு உயிர் அணுக்களில் போதையை ஏற்றி உணர்வை மங்கவைத்து ஒற்றுமை - இணக்கத்தை உடைக்கிறது. சாதாரண சளி முதல் - சார்ஸ் வரை வந்து புற்றுநோயில் முடிகிறது. உயிர் அணுக்களைப் பிhpப்பது, சதைப்பதுதான் இரசாயனம்.

எந்த மருந்தாலும் உயிர் அணுக்களை இணைக்க முடியாது. அது உணவாலும், நல் உணர்வாலும், நம்பிக்கையாலும் மட்டுமே முடியும் என்பதை சொன்னதோடு, இன்றைய நோய்கள் பெருகுவது மனதில் அமைதியின்மை, நம்பிக்கையின்மை, ஏமாற்றம் அடைதல், ஏமாற்றுதல், சுரண்டுதல் இதனால் 150 டிரில்லியன் உயிர் அணுக்களும் தங்களுக்குள் குழப்பம் அடைகிறது. அதுதான் SLE, AIDS போன்ற தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் நிலைக்கு ஆளாகிறது என்று தனதுBiology of Beliefஎன்ற நூலில் கூறியதுடன் உனது நம்பிக்கையே உன் உயிரோட்டம் என்றும் இது கிழக்கிந்திய நாட்டின் சாரம் என்றும் கூறுகிறாh;. ஆம், நம் ஆன்மீக வழிகாட்டி விவேகானந்தர். “நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்என்றார். நாமெல்லாம் நம் மேலான பலத்தை, உயர்ந்த நம்பிக்கையை, நம் கருணையை, அன்பை, ஆரோக்கியத்தை மறந்துவிட்டு நம்மை வைத்து கொள்ளை லாபம் காண கண்டுபிடித்த வெளிநாட்டுக்காரனின் கருவிகளை நம்பி எனக்கு என்ன இருக்கு சர்க்கரையா, இரத்தக் கொதிப்பா, TB யா, SLE , AIDS , Cancer என்று அதைப்பார்த்துக் கேட்கும் இழிநிலைக்கு ஆளாகலாமா?

அன்பைக் கூட்டு ஆன்மபலம் கொள்!

கருணையை இயல்பாக்கி இன்பத்தைப் பெறு!

நம்பிக்கையை நலம் காத்து நல்வாழ்வு வாழ

உலகோர்க்கு வழிகாட்டு!

உன்னதமாய் வாழ்ந்து காட்டு!!

உண்மையை நிலை நிறுத்து!!

*****

Related Articles

Treatment Center Locations