நலம் பெறுவோம்

Posted by Admin on 15-10-2018 9:54 AM

நலம் பெறுவோம்

நலம் நாடும் மனிதனின் வாழ்வில் மருத்துவரின் பங்கு மகத்தானதுதான், மறுக்க முடியாது. ஆனால் இன்றைய நவீன மருத்துவ யுக்தி மனிதர்களை பணம் காய்க்கும் மரங்களாகப் பார்ப்பதுதான் வேதனையை உண்டாக்குகிறது. எந்த மருத்துவர் மனிதனின் பயத்தை நீக்கி, உண்மை நிலையை உணர்;த்தி மனதில் நம்பகத் தன்மையையும், நோயின் பயத்தையும் போக்குகிறாரோ அவரே சிறந்தவர். ஆனால் இன்று நிலைமையே தலைகீழ், அதாவது இந்த வயதில் இந்திந்த நோய்கள் வரலாம். இப்படி இருமினால் இதோ இது வுடீ ஆக இருக்கலாம், விட்டுவிட்டு காய்ச்சலா ஏன் தீராத வியாதியாகக் கூட இருக்கலாம் என்று மன உறுதியில் குந்தகத்தை ஏற்படுத்தி மருத்துவ தர்மத்திற்கு (Medical Ethics) எதிராக விளம்பரம் செய்வதால் மக்கள் பயந்து மருத்துவமனைகளை நோக்கி ஓட வேண்டியதாயிற்று. அப்படி என்றால் நாம் உணரத் தவறியது எதை என்று கொஞ்சம் சிந்தித்தால் உண்மை புலப்படும், நோய் யாருக்கு நமக்கு நம்முடைய நோயை நாம் உணர்வதை விட அடுத்த மனிதனோ அல்லது மனிதன் வடிவமைத்துள்ள கருவிகளோ கண்டுபிடிக்க முடியுமா? ஏன் முடியாது என்கிறீர்களா? கருவிகள்தான் சரியாகக் காண்பிக்கின்றனவே அதை எப்படி இல்லை என்கிறீர்கள்தானே! சரி கருவிகள் சொல்வதெல்லாம் உண்மையா என்று பார்ப்போம். உங்களுக்கு இப்பொழுது அகோர பசி, இதை இந்த உலகில் எந்த கருவியாவது சொல்லுமா? சரி, அதை விடுங்கள் உங்கள் கை சுண்டுவிரல் நுனியில் குத்தும் குடையும் பளீர் என்ற வலி இந்த வலியை உலகில் உள்ள எந்த விஞ்ஞான தொழில் நுட்ப கருவியாவது அதை அப்படியே கண்டுபிடித்து சொல்லுமா! முடியவே முடியாது. ஏனெனில் நம் பசியையோ, வலியையோ உணர்த்தும் கருவிகளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்கிறார் Dr.பஸ்லூர் ரஹ்மான். ஆக மனிதனின் அடிப்படை உணர்தலே இந்த பசி, உடலினை வருத்தும் வலி இதையே கண்டுபிடிக்காத கருவிகள் வேறு எதை கண்டுபிடித்து நமக்கு என்ன பலனென்று நாம் புரிந்துகொள்ளும்வரை அதை வைத்திருப்போருக்கு லாபம்தான்.

நாம் இங்கே சொல்ல வருபவை அனைத்தும் நீங்கள் ஏற்கெனவே உணர்ந்தவைதான். விஞ்ஞானிகள் சொன்னவைதான் புதிதாக எதுவும் இல்லை. இப்போது நாம் உடலோடு உணர்வையும் அதன் செயல் விளைவுகளையும் சற்று கவனிப்போம்.

நம் கூர்ந்து உணரும் அறிவாலும் அனுபவத்தாலும் எல்லோராலும் எளிதில் நவீன மருத்துவத்தின் கூற்றுகள் உண்மை அல்ல என்பதனை உணர முடியும். குழந்தை பிறந்தவுடன் அதன் தேவையை அழுகை மூலம் உணர்ந்ததும் அள்ளி அணைத்து தாய்ப்பால் போதாதோ என்று நம் அறிவைக் கொண்டு அந்த குழந்தைக்கு மாட்டுப்பாலை கொடுத்தவுடன் இது வேறு பால் என்று அந்த பிஞ்சுக் குழந்தையின் உயிர்ச்சக்தி கண்டுபிடித்துவிட்டது என்பதை அதன் வாந்தி மூலம் உணரலாம். இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை மூலம் அதற்கு ஜீரணத்தைத் தூண்டும் ஊக்கி என்ற பெயரில் சாராயம் (Alcohol) கலந்த திராட்சைச் சாற்றைக் கொடுத்து குடலை ஸ்தம்பிக்க செய்து குடலின் இயல்பான ஜீரணத்தை பாழ்படுத்துவதுடன் குழந்தை எவ்வளவு செரிக்கும் என்பதை மறந்து போதையில் இருக்கும் குழந்தைக்கு வயிற்றை நிரப்பி தூங்கவைப்பது நம் பழக்கமாகிவிட்டது.

சரி, இதிலென்ன தவறு எனலாம், தாய்ப்பால் குடிக்கும் வரை குழந்தை தன் தேவைக்கு சப்பிச் சுவைத்துக் குடித்த நிலை மாறி இரசாயனத்தால் வெளுத்த சர்க்கரைப் பாலைக் கொடுத்து இந்த ஜீரண ஊக்கிகளுக்கு அடிமையாக்கிவிட்டோம். சரி அதனாலென்ன குழந்தை கெட்டா போயிற்று எனலாம். இல்லவே இல்லை, உடலும் குடலும் கெட விடாது என்பதுதான் இயற்கை நியதி. அதாவது தேவைக்கு மேல் போன விலங்கின் பாலெல்லாம் (குடலைப் பொறுத்தவரை) கழிவுதான் குடலில். அதனால் பால் கழிவு எளிதில் வெளியேறும் குணமுடையதன்று. பின்னே! குடலுறிஞ்சிகளுக்கிடையில் ஆங்காங்கே தேங்கிக் கொள்வதுடன், நாள்பட நாள்பட அது கெடக் கெட, அதைத் தூய்மைப்படுத்த அதிலிருந்தே மிக மெல்லிய புழுக்கள் உருவாகின்றன. இவை குடலையோ, குழந்தையையோ தின்ன வந்ததல்ல. பின் எதற்கு வந்தது, அந்த குடலில் தேங்கிய கழிவை தின்று தீர்க்க வந்தது. அப்படியானால் தின்றபின் அவை என்ன செய்யும்? வெளியேற வேண்டிய பாதையைத் தேடும். அதனால்தான் அவை ஆசனவாய் வழியில் வருவதை நாம் பார்க்க முடிகிறது இல்லையா. மருத்துவ வல்லுனர்களெல்லாம் சுகாதாரமில்லாத, காய்ச்சி வடிகட்டாத தண்ணீர், பால் கொடுத்ததால்தான் என்கிறார்களே - அப்படியானால் நம் குழந்தைக்கு சுகாதாரமில்லாமலா கொடுத்தோம், இல்லவே இல்லை. பின் எப்படி! அதாவது இயற்கையின் ரகசிய தூய்மைப்படுத்தும் கொள்கை என்னவென்றால் நம் வீட்டில் கண்டுகொள்ளாமல் விட்ட அரிசியில் செல் வைப்பதும், சமையல் அறையில் இருக்கும் அஞ்சறைப்பெட்டியில் பல வகையான பருப்பு, பயிறு வகைகளில் பூச்சி உருவாவதும், சீரகத்தில் புழு உருவாவதும் இயற்கை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். அதேபோல எலி, பெருச்சாளி அல்லது நாய் செத்துப் போனால் 3-4 நாட்களில் தாங்கமுடியாத துர்நாற்றம் ஏற்பட்டு அந்த அழுகிய சதையிலிருந்து புழுக்கள் உண்டாவதும் அந்த புழுக்களே அழுகியதை உண்டு தீர்த்தபின் இறப்பதும் இயற்கையின் அமைப்பு. ஆக புழுக்களின் பெற்றோர் கழிவுகள், கெட்டுப் போனவைகள், அழுகிப்போய் நாற்றம் வீசுபவைகள்தான். புழுக்கள் மீண்டும் புழுக்களை உண்டாக்கும் குணமுடையவை அல்ல என்பதை நாம் இங்கு உணரவேண்டும்.

புழுக்களின் நிலையே இதுவென்றால், இன்னும் ஆயிரம் மடங்கு நுண்ணுயிரிகளாக கருதும் பாக்டீரியாக்கள் பாக்டீரியாக்களை உண்டாக்குமா? அல்லது பல்கிப் பெருகுமா என்று சிந்திக்க வேண்டும்.

நாம் மீண்டும் குழந்தையைக் கொண்டே ஆராய்ச்சியைத் தொடங்குவோம். மாட்டுப் பால் அல்லது விலங்கின் பாலைப்பழக்கப் படுத்தி அதற்கு ஜீரண ஊக்கிகளைத் தந்ததினால் குழந்தை கொழு கொழுவென மாறுவதை நாம் பார்க்கிறோம். சரி, இந்தக் கொழு கொழு குழந்தை உண்மையிலேயே பலமுள்ள, ஆரோக்கியமான குழந்தைதானா என்று கவணிப்போம். (Haftyness is not Healthyness).

தாய்ப்பாலை மட்டும் உண்ட குழந்தைக்கு அதன் குடலுக்கு கிரகிக்கும் தன்மைக்கு ஏற்ற எளிய கொழுப்பு மற்றும் தேவையான உடல் வளர்க்க வளமான அனைத்தும் அதில் இருந்தது. அதற்கு கூடவே இந்த விலங்கின் பாலையும் வேதியல் சேர்மங்கள் (பலம் தரும், உடல் வளர்க்கும் என்ற அனைத்தும்) இரசாயனத்தால் வெளுத்த இனிப்புடன் (Bleached Sugar) சேர்த்துக் கொடுத்ததன் விளைவு ஜீரண ஊக்கிகளின் உதவியோடு உடல் மறுத்தாலும் வலுக்கட்டாயமாக செல்களில் தேங்கி குழந்தைகள் கொழு கொழு குழந்தைகளாகின்றன. அதனால் என்ன? என்றால், இந்த பலவந்தமாக திணிக்கப்பட்ட அரைகுறை சத்துக்கள், வேதியியல் சத்துக்கள்தான் அந்தக் குழந்தைக்கு உடலில் விரைவில் விஷமாகவும் கழிவாகவும் மாறும். சரி, அந்தக் கழிவுகள் எங்கே போகும் அந்த தேவையற்ற அரைகுறை சத்துப் பொருளை அக்கழிவுகளை வெளியேற்ற வாந்தி, பேதி அல்லது காய்ச்சல் என்ற விளைவை ஏற்படுத்தும். - நம் செல்கள் அத்தகைய மேன்மையான அறிவுடையது என்று நம் நாட்டு சித்த ஞானிகள் கூற்றுப்படி செல்கள் 10000 வதமான செயல்திறனை உடையவை என்றும், அமெரிக்க உயிரியல் விஞ்ஞானி (டாக்டர் புருஷ்லிப்டன்) செல்கள் மிக மேன்மையான இயற்கை அறிவைக் கொண்டது அது ஒருபோதும் தன் உயிர்ப்புத் தன்மைக்கு கெடுதல் செய்து கொள்வதில்லை, அதோடு நம் மனதின் புரிந்துணர்வின் பதிவுக்குத் தக்கவாறு சீதோஷ்ண, சூழ்நிலைக்கு ஏற்ப அது வாழும் சூழலுக்கேட்ப மாற்றி அமைத்துக் கொள்ளும் இயல்புடையவை என்கிறார்.

இப்போது நாம் மீண்டும் கொழு கொழு குழந்தைக்கே வருவோம்.  அந்தக் குழந்தையின் செல்கள் அதிபுத்திசாலித்தனமானது - எப்படி என்றால் எப்போதாவது நாம் சிறிது அதற்கு சந்தர்ப்பம் கொடுத்தால் கூட அதாவது உணவு ஊட்டும் இடைவெளியை அதிகரித்தாலோ அல்லது உடலுக்குத் தேவையான ஓய்வளித்தாலோ அந்த தேவையற்ற அரைகுறை சத்துப் பொருளை அக்கழிவுகளை வெளியேற்ற வாந்தி, பேதி, அல்லது காய்ச்சல் என்ற விளைவை ஏற்படுத்துகிறது. இது குணப்படுத்தும் செயல் முடிந்த பின் வந்த விளைவாகும் என்பவை நாம் அறியாதவர்களாக இருப்பதால் அதை குணப்படுத்த முயற்சி செய்கிறோம் நம் மருத்துவத்தால். இது முடியாத விஷயம். எப்படியும் வாந்தியும் பேதியும், சுரமும் தணியத்தானே செய்கிறது! அது தணிவதற்குக் காரணம், ஏற்கெனவே இருக்கும் கழிவை வெளியேற்றிய பின் அல்லது அந்த செயல் நடந்து கொண்டிருக்கும்போதுதான் நமக்கு வாந்தி, பேதி, காய்ச்சல், வலி ஏற்படுகிறது. ஆக நாம் சாப்பிடும் அல்லது ரத்தநாளத்தில் செலுத்தும் ரசாயன விஷங்கள் உள்ளே சென்றவுடன் இந்த உடல் செல்கள் ஏற்கெனவே இருக்கும் கழிவைவிட இது புதுவித ரசாயன விஷமாக உள்ளதே என புரிந்துகொண்டு அதை வெளியேற்ற தன் முழு பலத்தையும் தந்து செயலாற்றும் அந்தக் குழந்தையின் உயிர்ச்சக்தி இந்த ரசாயன விஷத்தின் வலிமையால் பலம் இழக்கிறது. எனவே, தற்காலிகமாக அச்செயல் நின்று விட்டதால் அந்தக் குழந்தையின் உடலில் மாற்றங்கள் உண்டாவதை உணர்கிறோம். இது உயிர் ஆற்றலின் தொங்கல் நிலையே தவிர குணமான நிலை அல்ல. அப்படி குணமாகியிருந்தால் மீண்டும் மீண்டும் அதே போன்ற காய்ச்சல், வாந்தி, பேதி, சர்க்கரை, கொழுப்பு போன்ற ஏராளமான நோய்கள் திரும்ப வரக்கூடாது. அதனால் தான் பத்மபூஷன் இருதய சிறப்புநிபுணர் டாக்டர் B.M..ஹெக்டே எல்லா நோய்க்கும் மருந்துண்டு என்பது 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய பொய் என்றும் எந்த நோய்க்கும் மருந்தில்லை எல்லா நோய்க்கும் காரணம் மருந்துகள்தான் என்கிறார். இப்போது நன்றாக உணர்ந்து கொள்ள முடிகிறதா மருந்து என்ன செய்கிறதென்று? நம் உடலின் இயல்பான குணமாக்கும் செயலுக்கு குறுக்கே நிற்பதுதான் பருப்பொருள் மருத்துவங்கள் அனைத்தும். மருந்து என்றாலே நம் உடல் உயிராற்றலின் இயல்பான இயக்கத்திற்கு மாற்று உந்துதலை நிகழ்த்தும் செயலைச் செய்வதுதான் என்பதை மிக எளிதில் தெளிவாக்குகிறது (மரு உந்து)

அப்படி என்றால் சுர மாத்திரைகள் சுரத்தை தணிக்கத்தானே செய்கிறது நமக்கு அதன் பின் சுகமாகத்தான் அதாவது கஷ்டமில்லா உணர்வுதானே இருக்கிறது நாம் கஷ்டப்படாமல் இருக்க மருத்துவர் அவசியம்தானே என்று நினைக்கலாம். மருந்துகள் உண்மையிலேயே நம் கஷ்டங்களை, துன்பங்களை காரணம் கண்டு அழிப்பதில்லை பின என்ன செய்கிறது என்றால் அந்தக் கஷ்டங்களை உணர்ந்து குணமாக்கக் கூடிய தன்மையினை செயலிழக்கச் செய்வதைத்தான் செய்கிறது. அதனால்தான் தற்காலிகமாக எந்த செயலும் விளைவும் நடப்பதில்லை. அதை நாம் அறியாமல், சுகமாகிவிட்டதாக போலியான உணர்வை அடைகிறோமே ஒழிய சுகமடையவில்லை.

சரி, அதன்பின் என்ன நடக்கும் என்றால், நம் உடலுக்குள் எந்த நிலையிலும் அந்நியப் பொருள்களை நம் உயிர் ஆற்றல் அனுமதிக்காது. எனவே, உயிரின் பலம் கூடியதும் மீண்டும் சேர்ந்துவிட்ட கழிவுகளை வெளியேற்ற முயற்சிக்கும்போது உள் உராய்வின் மூலம் உஷ்ணத்தை ஏற்படுத்தி காய்ச்சலை உண்டாக்குகிறது. மீண்டும் மீண்டும் அதற்கு இரசாயனங்களும், அதன்பின் அக்கழிவுகளால் இரத்தத்தில் தோன்றிய மிகமிகச் சிறிய பேக்டீரியாக்களும், அதைக் கொல்ல விசங்களை உண்டபின் அதை விட இன்னும் சிறிதினும் சிறிதான, தன் வடிவத்தை தேவைக்குத் தகுந்தபடி, தேவையான வண்ணத்தில் மாற்றிக்கொள்ளும் சிறப்பு மிக்க வைரசையும், நாம் நம் உடலின் உள் இரத்தத்தில் சேர்ந்துபோன வைரசை மீண்டும் கொல்ல விசம் வைத்ததால் வைரஸ் செத்தது. விசமும், அழுக்கும் மிஞ்சியது. நோய் அடுத்த கட்டம் நோக்கி அதன் நடையைத் தொடர்கிறது. எனவேதான் நோய் போக, போக்க எந்த மருந்தும் கண்டுபிடிக்கப் படவில்லை, மறைக்கத்தான் மருந்து.

சரி, மறைந்த - பதுங்கிய, உள்ளே அமுங்கிய நோய்கள் என்ன ஆகும் - மீண்டும் புதுவிதமாக வெளியில் வரத்தான் செய்யும். நாமும் புரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. அதைப் புது நோயாக மீண்டும் வேறு மருந்துகளால் அமுக்கப் பார்க்கிறோம். வியாதி தொடர்கிறது. பலம் தொலைகிறது. நலம் நம்பிக்கை இழக்கிறது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                


Related Articles

Treatment Center Locations